சிவாய ஓம்

சிவாய நம ஓம் - சிவாய நம ஓம் - சிவாய நம ஓம்

...பொய்யான மாய உலகில் நிலையான உண்மையை தேடும் பித்தன்...

(ஓம்)

மாயை சூழ்ந்த பூத உலகில் அல்லல் படும் ஜீவன்.

ஓம் நமசிவாய வாழ்க , நாதன்தாழ் வாழ்க ,

Translate

சிவாய ஓம்

ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம்

Monday, August 13, 2012

குதம்பைச் சித்தர் பாடல்கள்

குதம்பைச் சித்தர் பாடல்கள்



முதன்மைக் கட்டுரை:

காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
  கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
  கோலங்கள் ஏதுக்கடி ?

வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
  உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
  உண்காயம் ஏதுக்கடி ?

மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
  தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
  தேங்காய்ப்பால் ஏதுக்கடி ?

பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவோர்க்கு
  முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
  முட்டாக்கு ஏதுக்கடி ?

தாவரமில்லை தனக்கொரு வீடில்லை
  தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்
  தேவாரம் ஏதுக்கடி ?

தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்
  பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய்
  பின்னாசை ஏதுக்கடி ?

பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு
  உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய்
  உத்தாரம் ஏதுக்கடி ?